POLLING FLAMES

 

எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

2 years ago 31 மார்ச் 2024 03:16 PM | views : 237
மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார்.

ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட அந்தக் கட்சி பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்" எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், "மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் அக்கட்சி வேட்பாளராகவும் இருக்கும் ராம சீனிவாசன் என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. அதிமுக வரலாறு உனக்கு தெரியுமா?நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் நாங்கள். மக்களுக்கு சேவை செய்து அரசியல் செய்கின்றோம். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி என்றால் அதிமுக தான்.

எங்களை பார்த்து 2024ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறாய். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருக்கு உங்களை போன்றவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். அது தான் எதார்த்த உண்மை.1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியது அதிமுக தான். உங்களுக்கே அடையாளம் காட்டியது அதிமுக தான். இப்போ எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?" என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK PMK முக ஸ்டாலின் ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION கோவை UDHAYANIDHI STALIN திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு AJITH அமமுக OPS KEERTHY SURESH சீமான் கைது பிரதமர் மோடி BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் அஜித் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION கள்ளக்காதல் தேவர் வன்னியர் RAJINIKANTH CSK 2024 T20 WORLDCUP தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் சூர்யா தூத்துக்குடி மதுரை விடுமுறை SURIYA