POLLING FLAMES

 

திராவிட கும்பலை ஓட ஓட விரட்ட வேண்டும் : அண்ணாமலை

2 years ago 07 ஏப்ரல் 2024 09:31 AM | views : 214
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-

அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம்.

கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.

குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.

கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம்.

அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் PMK ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை முக ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக தமிழகம் கோவை CONGRESS இந்திய அணி PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கைது அமமுக OPS KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM AJITH தமிழ்நாடு சீமான் INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா THIRUMAVALAVAN நெல்லை NELLAI BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் RAJINIKANTH ELECTION COMMISSION விடுமுறை மதுரை திருப்பரங்குன்றம் தென்காசி கள்ளக்காதல் சூர்யா வன்னியர் SURIYA அஜித் தேவர் CSK வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்