நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அதன் ஒரு பகுதியாக தக்கலை பகுதியில் நடைபெற்ற வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்றார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில், சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்து அமித்ஷாவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது;-"தமிழ் பண்பாடு, மரியாதையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து பா.ஜ.க.வை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அயோத்தி ராமர் கோவில், சனாதன தர்மம் ஆகியவற்றை அவதூறாக பேசி தி.மு.க. இந்துக்கள் மனதைக் காயப்படுத்தியது. பா.ஜ.க. வெல்லும் 400 இடங்களில் பொன்.ராதாகிருஷ்ணனுடையதும் ஒன்றாக இருக்க வேண்டும்." இவ்வாறு அமித்ஷா பேசினார்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!