POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை

2 years ago 13 ஏப்ரல் 2024 07:08 AM | views : 179
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சி என்னவென்றால் அது அ.தி.மு.க.தான். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அ.தி.மு.க.வை ஒப்பந்தரார்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே இது தெரியும். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு அதிமுக டி.டி.வி. தினகரன் வசமாகும். டி.டி.வி. தினகரன் கையில் அ.தி.மு.க. சென்றிருந்தால் ஸ்டாலின் முதல் அமைச்சராகியிருக்க மாட்டார்" என்றார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் கனமழை TAMIL NADU மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் PMK AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கைது திருமாவளவன் ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழகம் சட்டசபை தேர்தல் கோவை CONGRESS இந்திய அணி EDAPPADI PALANISWAMI COIMBATORE UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM KEERTHY SURESH பிரதமர் மோடி OPS கொலை அமமுக வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN சீமான் தேவர் வன்னியர் TAMIL ACTRESS தென்காசி ஓபிஎஸ் NELLAI நெல்லை AJITH SURIYA தீபாவளி ASSEMBLY ELECTIONS PARLIAMENT ELECTION தமிழ்நாடு மதுரை திருப்பரங்குன்றம் சூர்யா மோடி CSK பாலியல் தொல்லை NORTHEAST MONSOON PRIME MINISTER MODI BIGG BOSS TAMIL அஜித் கீர்த்தி சுரேஷ் அன்புமணி கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி MADURAI ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல்