POLLING FLAMES

 

பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்தற்காக நன்றி தெரிவிக்கின்றேன்: பிரதமர் மோடி

1 year ago 04 ஜூன் 2024 04:18 PM | views : 216
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.

இதில், பா.ஜ.க. சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் மாற்றம் ஏற்படுத்த மக்கள் வாக்களித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி 140 கோடி மக்களுக்கான வெற்றி. 3-வது முறையாக மக்களின் ஆசி கிடைத்துள்ளது. பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.அவர் தொடர்ந்து பேசும்போது, தாயை இழந்த பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால், நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்கள் தங்களின் அன்பை என் மீது பொழிந்துள்ளனர் என்று பேசியுள்ளார்.

தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்காக அனைவருக்கும் நன்றி. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பேசியுள்ளார். கோடிக்கணக்கான ஏழைகளுக்கு 5 கிலோ இலவச தானியம் கிடைத்துள்ளது என்றும் பேசியுள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் PMK டிடிவி தினகரன் AIADMK கனமழை பாமக பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கோவை தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS திருமாவளவன் COIMBATORE INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் AJITH EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக பிரதமர் மோடி கைது OPS தமிழ்நாடு PARLIAMENT ELECTION சீமான் KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL RAJINIKANTH நெல்லை TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI சூர்யா வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி CSK தென்காசி ELECTION COMMISSION கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் விடுமுறை தேவர் வன்னியர் தீபாவளி அஜித் SURIYA கீர்த்தி சுரேஷ் மதுரை