POLLING FLAMES

 

பெரிய அடி வாங்கிய அதிமுக.. 7 தொகுதிகளில் டெபாசிட் காலி! 3 தொகுதிகளில் 3வது இடம்..!

1 year ago 05 ஜூன் 2024 02:11 AM | views : 236
சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை 32 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் 'இந்த லேடியா? அல்லது மோடியா?' என்ற அவரது பிரசார முழக்கம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அதோடு 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024-ம் ஆகிய 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. அதில் அ.தி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது.

இதுதான் அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சிக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.

அதே போல் இந்த தேர்தலில் அ.தி.முக., தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK PMK காங்கிரஸ் முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS இந்திய அணி PARLIAMENT ELECTION கோவை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு AJITH அமமுக OPS KEERTHY SURESH சீமான் கைது பிரதமர் மோடி BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் SURIYA தென்காசி ELECTION COMMISSION விடுமுறை கள்ளக்காதல் தேவர் RAJINIKANTH CSK 2024 T20 WORLDCUP அஜித் தீபாவளி வன்னியர் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி சூர்யா