விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவில்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!