ராயன் ரூ.150 கோடி வசூல்?

ராயன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

தற்போது, இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

அதேநேரம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ஜெயிலர் வெளியீட்டின்போது நாளுக்கு நாள் வசூல் விவரங்களை வெளியிட்டது. ஆனால், ராயன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை இன்னும் வெளியிடாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.. பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel