ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று (ஆக. 14) அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 3வது முறையாக நேற்று (ஆக. 13) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த யுஸ்னெயிலிஸ் குஸ்மன் லோப்ஸ் (அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்றவர்) உடன் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என ஆகஸ்ட் 7ஆம் தேதி வினேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, 100 கிராம் எடை என்ற மிகச்சிறிய எடை வேறுபாடு, ஒலிம்பிக்கின் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கம் பற்றி கேள்விகளை எழுப்புகிறது .
இரு நாள்களின் இரண்டாவது நாளில் குறைந்த அளவிலான எடை மிகுதிக்காக ஒரு வீராங்கனையை முழுவதுமாக தகுதிநீக்கம் செய்வது ஆழமான ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது. வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!