பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்தார்.
இது தொடர்பான விசாரணையில் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வினேஷ் போகாட்டுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று சச்சின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சச்சினின் பதிவு: “அனைத்து விளையாட்டுக்கென தனி விதிமுறைகள் உள்ளன. சில நேரங்களில் அதை மீண்டும் பார்வையிட வேண்டும். வினேஷ் போகாட் மிகவும் நேர்மையான வழியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
ஆனால், இறுதிச் சுற்றுக்கு முன்பு எடைக் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட்டின் பதக்கத்தைப் பறிப்பதில் அர்த்தமில்லை.
விதியை மீறி ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவரின் பதக்கத்தைப் பறிப்பதோ அல்லது அவருக்கு கடைசி இடம் கொடுப்பதோ நியாயமான ஒன்று.
ஆனால் எந்த தவறும் செய்யாமல் தனது திறமையால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும்.
அவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்து அனைவரும் தீர்ப்புக்காக காத்திருப்போம்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை சின்னமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும்
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!