வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாக உள்ளது.இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முன்னதாக டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இரஞ்சித், “மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைக் காட்டி அது குறித்து பேச வைக்கிறார். என்னுடைய படத்தைப் பாருங்கள் என்று சொல்லவே எனக்கு கூச்சமாக இருக்கும். ஒரு சில இயக்குநர்கள் என் படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் கருத்தை சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறேன்.
ஒரு பிரபல இயக்குநர், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என் படத்தைப் பார்த்தும், அதை என்னிடம் சொல்லவில்லை. அவர் என் படத்தைப் பார்த்ததாக அவருடன் சேர்ந்து பார்த்த ஒரு சிலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், அந்த இயக்குநரே தற்போது மாரி செல்வராஜ் படம் குறித்து பேசுகிறார். இதை நான் கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை” என்றார்.
இதைத் தொடர்ந்து இரஞ்சித் எந்த இயக்குநரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே வாழை டிரைலர் வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த மணிரத்னம், “மாரி செல்வராஜ் தமிழ் திரையுலகின் வலிமையான குரலாக இருக்கிறார். அவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இப்படத்தில் எப்படி இவ்வளவு நடிகர்களைச் சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது தெரியவில்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவரிடம் தனி திறமை உள்ளது” என்றார்.இந்நிலையில், பா. இரஞ்சித் மணிரத்னத்தை குறிப்பிட்டு தான் அந்த கருத்தை தெரிவித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!