பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் தனது நகைச்சுவை பேச்சால் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள இவர் வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பாரதி பாஸ்கர் கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த மருத்துவ முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிகிறது. பாரதி பாஸ்கர் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், ஜெபங்கள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!