POLLING FLAMES

 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் பெட்ரோல் இலவசம்.. நூதன போட்டியால் அலைமோதிய கூட்டம்

1 year ago 20 அக்டோபர் 2024 03:16 PM | views : 237
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.

ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழகம் கோவை CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் COIMBATORE AJITH கைது KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு அமமுக OPS சீமான் பிரதமர் மோடி THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை வன்னியர் தூத்துக்குடி தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION SURIYA மதுரை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தேவர் RAJINIKANTH விடுமுறை CSK சூர்யா அஜித் தீபாவளி திருப்பரங்குன்றம்