மதுரை: ''பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்துமிடுவது இயல்பானது ஒன்று தான். இதை ஒரு காரணமாக வைத்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தது சரியல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், பருவ வயதில் காதலிக்கும் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த இயல்பாக நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர வேறில்லை.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போலீஸார் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அந்த வழக்கை நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யலாம். அந்த அடிப்படையில் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!