POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர்1

5 months ago 24 அக்டோபர் 2025 03:28 AM | views : 230
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக AMMK ADMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN கனமழை மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் கைது தமிழகம் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் திருமாவளவன் காங்கிரஸ் சட்டசபை தேர்தல் கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI CONGRESS இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை சீமான் தேவர் அமமுக KEERTHY SURESH பிரதமர் மோடி OPS வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN வன்னியர் ஓபிஎஸ் NELLAI நெல்லை தென்காசி ASSEMBLY ELECTIONS AJITH TAMIL ACTRESS PARLIAMENT ELECTION தமிழ்நாடு தீபாவளி மதுரை SURIYA அன்புமணி BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை விடுமுறை அஜித் NORTHEAST MONSOON MADURAI TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் CSK PRIME MINISTER MODI மோடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் சூர்யா தூத்துக்குடி