Tamil News & POLLING

 

பெருமாநிலங்களை முந்தி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

3 months ago 13 டிசம்பர் 2025 07:33 AM 180 views
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை.

பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16 சதவீததுடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்..!

கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி. 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி.

நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம். தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!

2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால்… pic.twitter.com/FPwNC9Xl0b

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 13, 2025

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் சீமான் எடப்பாடி பழனிசாமி தமிழகம் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM கனமழை பிரதமர் மோடி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாமக கைது PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் CONGRESS SEEMAN NELLAI EDAPPADI PALANISWAMI அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM கோவை கொலை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH மதுரை திருநெல்வேலி தமிழ்நாடு நெல்லை COIMBATORE சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் THIRUMAVALAVAN OPS தென்காசி TAMIL ACTRESS திருமாவளவன் நயினார் நாகேந்திரன் TAMIL CINEMA ஓபிஎஸ் தேவர் திருப்பரங்குன்றம் டிரெண்டிங் தீபாவளி AJITH NORTHEAST MONSOON பாலியல் தொல்லை MADURAI நாம் தமிழர் கட்சி விடுமுறை கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் வன்னியர் தமிழக அரசு ELECTION COMMISSION THOOTHUKUDI