சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்து சில வாரங்களில், நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே சில தினங்களுக்கு முன் நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மறைந்தார். இந்நிலையில் மற்றுமொரு சினிமா பிரபலம் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்தார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவுன் ராஜின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!