POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

15 வயது மாணவனை ஒரு வருடமாக வீட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது ஆசிரியை! முழு விவரங்கள் இதோ 😱

6 days ago 09 ஏப்ரல் 2026 06:20 AM | views : 265

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் பவித்ரா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார்.


 இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அடிக்ககடி எல்லை மீறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளார்கள். ஆனாலும் டியூசன் ஆசிரியை, மாணவன் இடையே எல்லை மீறிய உறவு தொடர்ந்து வந்துள்ளதாம். இதனை கண்டுபிடித்த பெற்றோர், தனது மகனுக்கு தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆசிரியை பவித்ராவை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னையிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் இந்த பெண் வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வருகிறார். ஒரே கடையில் பணிபுரிவதால், அந்த பெண்ணும், சிறுவனும் சகஜமாக பழகினார்கள்.. நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது.


ஒருகட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள். அத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்கள் ஒரு கட்டத்தில் இருவரும் திடீரென கல்யாணமும் செய்து கொண்டனர். இந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17வயது மாணவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த 24வது இளம் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.


அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவர் அதற்கு சம்மதிக்க மறுத்து விட்டார்.தன்னை காதலித்துவிட்டு, தன்னோடு ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தார்கள். இந்த விவகாரம் அப்போதுதான் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாணவரின் தாயார், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டயாப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் இப்படி கைதாகி உள்ளனர்.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் கைது கோவை திருமாவளவன் காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM COIMBATORE சட்டசபை தேர்தல் CONGRESS தேவர் பிரதமர் மோடி KEERTHY SURESH வன்னியர் அமமுக வடகிழக்கு பருவமழை கொலை EDAPPADI PALANISWAMI தீபாவளி SURIYA NELLAI நெல்லை ஓபிஎஸ் சீமான் AJITH PARLIAMENT ELECTION தமிழ்நாடு தென்காசி OPS THIRUMAVALAVAN TAMIL ACTRESS PRIME MINISTER MODI TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் அன்புமணி அஜித் விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி MADURAI சூர்யா CSK மதுரை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON ELECTION COMMISSION