POLLING FLAMES

 

அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்!

1 hour ago 02 மே 2026 03:10 AM | views : 8

கரூர் சாலப்பட்டி அருகே அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க 


Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S 


கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் 79 வயதுடைய தாயாரம்மாள். இவர் கடந்த (ஏப் 26) ஆம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை லந்தகோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசிவிட்டு, வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணை அருகே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றுள்ளார்.


அப்போது, வழக்கமாக அதிகாலை 4 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் அன்றைய தினம் 6.45 மணி ஆகியும் எழாததால் சந்தேகம் அடைந்து, வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கை, கால்கள், மற்றும் வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் அருணாச்சலம் மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் சாலப்பட்டிக்கு விரைந்து வந்திருக்கிறார். பின்னர் தாயாரின் சடலத்தை பார்த்த மனோரஞ்சிதம் அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவை இல்லாததை கவனித்து இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 



அதனைத் தொடர்ந்து, மூதாட்டியின் நகைக்காக ஆசைப்பட்டு மர்ம நபர் கை கால்களை கட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடி இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி, கருப்பூர் சாலப்பட்டி கிராமத்தை சுற்றிலும் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்த போது, சில மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டை நோட்டமிட்டது தெரியவந்துள்ளது.



ஆனால் சிசிடிவியில் தெளிவான புகைப்படங்கள் கிடைக்காததால், ஏஐ மூலம் அந்த புகைப்படங்களை மாற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் மூலம் இரண்டு முக்கிய குற்றவாளிகளை கரூர் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீசார் சென்னை சென்ட்ரல் போலீசாரை அலர்ட் செய்த நிலையில்,ரயில் மூலம் சென்னை தப்பிச் சென்ற அவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.



பிறகு கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டீஸ்வரன் (19) என்பது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி வசிக்கும் பகுதியில் ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவரை நோட்டமிட்டு, அதிகாலையில் சென்று கட்டிப் போட்டு நகைகளை திருடியதாகவும், அவர் தங்களை வெளியில் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களுடன் தனக்கு பாளையங்கோட்டை சிறையில் பழக்கம் ஏற்பட்டதாகவும், வயதான மூதாட்டி போன்று, தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து கரூர் மாவட்ட தனிப்படை போலீசாரிடம் பாண்டீஸ்வரன் ஒப்படைக்கப்பட்டார்.


விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனிதா அவரது கணவன் கொம்பையா இவரது நண்பர்கள் பார்த்திபன், சதீஷ்குமார், பாண்டீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து நகைக்காக திட்டமிட்டு மூதாட்டியை கை, கால்களை கட்டி நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில் குற்றவாளிகளை போலீசார் பிடிக்க சென்ற பொழுது தப்பிச்செல்ல என்ற பொழுது கொம்பையா மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நடுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை ANBUMANI RAMADOSS AIADMK PMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழகம் CONGRESS இந்திய அணி கோவை PARLIAMENT ELECTION COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக KEERTHY SURESH AJITH தமிழ்நாடு பிரதமர் மோடி OPS INDIAN CRICKET TEAM சீமான் கைது தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை தேவர் சட்டசபை தேர்தல் RAJINIKANTH NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL வன்னியர் நெல்லை கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN SURIYA சூர்யா ELECTION COMMISSION தென்காசி தூத்துக்குடி மதுரை அன்புமணி அஜித் விடுமுறை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் CSK தீபாவளி