சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று காலை 11 மணி அளவில் செல்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து தமிழகத்துக்கு காரில் வந்த சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.
சென்னை திரும்பிய அவர், தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில்வசித்து வருகிறார். அப்போது சசிகலாவை சீமான், சரத்குமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.சசிகலா தனது அரசியல் பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று அப்போது பேச்சு எழுந்தது.
பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுப்பார்என்றும், தினகரனின் அமமுகவேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதுபோல எதுவும் நடைபெறவில்லை.
இதற்கிடையே, ஆதரவாளர்களுடன் சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியானதால் அவரதுஅரசியல் வருகை பற்றி மீண்டும் பேசப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவரது பெயரில் 'நமது எம்ஜிஆர்'நாளிதழில் கட்டுரை வெளியாகி வருகிறது. அதில், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி(இன்று) செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொன்விழா 17-ம் தேதி (நாளை) தொடங்கும் நிலையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா இன்று காலை 11 மணி அளவில் சென்று மலர்தூவி மரியாதைசெலுத்துகிறார். அவரை வரவேற்கமாநிலம் முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் சென்னை வருவதாகவும், அவர்கள் மத்தியில் பேசும்சசிகலா, அரசியல் வருகை குறித்துமுக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!