ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் உள்ள நிலையில், சூர்யாவிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருக்கிறது என்றும்,
உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்ற போதிலும், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைக்கும் காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படமானது அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை... என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை தரும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது. தீப ஒளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு
முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் காலமானார்
மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்!
சென்னையில் 1 மணி வரை மழை நீடிக்கும்.. 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!
உலக நாயகன் பட்டத்தை துறக்கிறேன் - கமல்ஹாசன் சொல்லும் காரணம் என்ன?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!