ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார்.
''கோவிந்தனை வன்னியரா பார்க்கக் கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம்.. அப்போ படத்தில் போலீஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது? எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பது தானே எதிரிவினையாக இருக்கும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனுக்கு ஏன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை சூட்டி சாதிய அடையாளம் ஏற்படுத்தினீர்கள் என படக்குழுவை சூசகமாக வினவியிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கோவிந்தனை வன்னியராக பார்க்கக்கூடாது அவரை கம்யூனிஸ்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனிடையே சூர்யாவை நடிகன் என குறிப்பிட்டுள்ள ஷியாம் கிருஷ்ணசாமி அவரது வசனத்திற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்.
ஷியாம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ள கோவிந்தன் தான், ராஜாகண்ணுவுக்கு நீதி கோரி முதல் நபராக போராட்டத்தை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரை வன்னியராக பார்க்கக்கூடாது கம்யூனிஸ்டாக பார்க்க வேண்டும் என நேற்று முதல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
வில்லனுக்கு மட்டும் வன்னியர் சமுதாய முத்திரை, நல்லவருக்கு மட்டும் கட்சி முத்திரையா என்பதே ஷியாம் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்வியாகும். குறவருக்கு பதில் இருளர், படம் எடுக்கப்போவதாக அனுமதி பெறவில்லை, கேள்விக்கு பதிலில்லை என நாளுக்கு நாள் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!