INDIAN 7

Tamil News & polling

ப்ளீஸ், என்னை தல னு கூப்பிடாதீங்க: அஜித் குமார்

01 டிசம்பர் 2021 09:59 AM | views : 170
Nature

அஜித்தை ரசிகர்கள் அனைவரும் அன்புடன் தல என்றே அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பெது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.



அன்புடன்,
அஜித்குமார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து #AjithKumar என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்களோ, இனிமேல் தலனு கூப்பிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள்,

Image தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில்

Image சென்னை, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம்

Image காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு நிற பலூன்கள்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்