கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்!

கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்!

Views : 92

அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.


சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது,. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர்.

மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவருக்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளன. எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் positron emission tomography என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. உடலில் எங்கும் கத்தி வைக்கப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.

ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று dostarlimab மருந்தை ஸ்பான்சர் செய்த Glaxo Smith Kline நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த dostarlimab மருந்து உடலில் மூன்று வாரங்களு ஒரு முறை செலுத்தப்படும். மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆக மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் கேன்சர் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக கேன்சர் செல்களை அழிக்க வழி செய்கிறது.

இதனால் இயற்கையாக கேன்சர் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் dostarlimab சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

மார்கெட்டிற்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றினைந்த திசையன்விளை உலக இரட்சகர் பள்ளி மாணவ, மாணவிகள்!

2022-06-06 06:06:57 - 2 weeks ago
24 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றினைந்த திசையன்விளை உலக இரட்சகர் பள்ளி மாணவ, மாணவிகள்! திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்திரு.ஆண்டனி டக்ளஸ் முன்னாள் ஆசிரியர்கள் எட்வின், சரோஜா முன்னாள் மாணவர்கள் மகராஜன், சுபாஷினி மெர்லின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விஜயா

தேவருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

2022-06-09 17:32:06 - 2 weeks ago
தேவருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை! எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்!

2022-06-20 07:42:26 - 5 days ago
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்! ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில்