பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். காந்தி நகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக வழங்கிவிட்டார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35,250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார்.
நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதேபோல், தற்போது இரண்டாவது முறையும் சேர்த்து மொத்தம் 8 ஆண்டுகள் அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!