Tamil News & POLLING

 

நாங்குநேரி சிங்கிகுளம் மலையில் ராஜராஜ சோழனின் செம்பு காசுகள் கண்டெடுப்பு!

3 years ago 19 செப்டம்பர் 2022 04:18 AM 162 views
சிங்கிகுளம் சமண மலையில் 10ம் நூற்றாண்டு ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் பயன்பாட்டில் இருந்த செம்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று 13ம் நூற்றாண்டின் செங்கல்லும் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிங்கிகுளம் சமணமலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், நீர்ச்சுனைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளது.

நெல்லை தொல்லியல் கழகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் குழுவினர் சிங்கிகுளம் சமண மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்த செம்பாலான நாகரி எழுத்துடன் 8 ஈழக்காசுகள் மற்றும் 13ம் நூற்றண்டைச் சேர்ந்த பெரிய செங்கலும் கிடைத்துள்ளன.

ஈழப் போர் மூலம் இலங்கையை, முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு உலோகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. அக்காசுகள் முதலாம் ராஜராஜசோழன் முதல், முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை பொதுமக்களால் செம்பாலான ஈழக்காசு, ஈழக்கருங்காசு என அழைக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட ஈழக்காசுகள் சுமார் 3 முதல் 5 கிராம் வரை எடை இருக்கும். கி.பி 1000-1100ம் ஆண்டை சேர்ந்தது என கருதப்படும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ‘ராஜ ராஜ’ என்று நாகிரியில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடித்த இவை சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மாறி, மாறி இருந்து வந்ததால் பாண்டிய நாட்டு மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 22க்கு 15ல் பெரிய செங்கல் ஒன்றும் இக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செம்புக் காசுகளை தொல்லியல் ஆய்வுக் குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் சீமான் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் PMK கனமழை INDIAN CRICKET TEAM காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION கைது NELLAI அமமுக EDAPPADI PALANISWAMI கொலை வடகிழக்கு பருவமழை SEEMAN KEERTHY SURESH கள்ளக்காதல் TAMIL ACTRESS தமிழ்நாடு COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி மதுரை கோவை சட்டசபை தேர்தல் திருநெல்வேலி OPS THOOTHUKUDI ELECTION COMMISSION பாலியல் தொல்லை தமிழக அரசு விடுமுறை கீர்த்தி சுரேஷ் AJITH கொரோனா நாம் தமிழர் கட்சி ஓபிஎஸ் TAMIL CINEMA THIRUMAVALAVAN தேவர் நெல்லை NORTHEAST MONSOON வன்னியர் டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI நயினார் நாகேந்திரன் தீபாவளி திருமாவளவன் திருப்பரங்குன்றம்