சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களில் ஒன்று நல்லூர். ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரைச் சார்ந்தவர் வெள்ளையன் கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பழகன் வயது 32. இவரும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். அன்பழகனுக்கு திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர்.
அப்போது வெள்ளக்கடை பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண்ணான 14 வயது மாணவியை திருமணம் செய்து வைக்க பேசி முடிவு செய்து சில நாட்களுக்கு முன்பு திருமணமும் நடந்தது.
இந்த மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். திருமணம் ஆன பிறகு மாணவி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். மாணவி கழுத்தில் தாலிகயிற்றுடன் பள்ளிக்கு வந்ததை அறிந்த ஆசிரியர்கள் சிலர் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசி மாணவி திருமணமாகி வந்துள்ளதை தெரிவித்தனர்.
பின்னர் இது உண்மையா என சமூக நலத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் துறை அதிகாரி அனைவரும் தனித்தனியே விசாரணை செய்தனர். இதில் 14 வயதான மாணவிக்கு 32 வயதான வாலிபருடன் திருமணம் செய்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியை மீட்டு அவருக்கு அறிவுரைகள் வழங்கி சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்
பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவிக்கு குழந்தை திருமணம் நடந்தது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதின் பேரில் டிஎஸ்பி தையல்நாயகி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட வாலிபர் அன்பழகன் மற்றும் அவரது தந்தை வெள்ளையன், வெள்ளையனின் மனைவி வெள்ளாயி, மாணவியின் தந்தை சந்திரன் மாணவியின் தாயார் உண்ணாமலை ஆகியோர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அன்பழகன், வெள்ளையன், சந்திரன் ஆகிய மூன்று பேர் சேலம் மத்திய சிறையிலும் வெள்ளாயி உண்ணாமலை ஆகியோர் சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!