தமிழில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகையின் மகள்!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் பெயர் மில்லி.ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் தம்பதியினரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.




இவர்களுக்கு குஷி கபூர் என்ற இளைய மகளும் இருக்கிறார். ஜான்வி கபூர் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார்.

இவர் சவாலான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்.விஜய்சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டி யில், “எனக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தைப் பார்த்து அவருக்கு ரசிகை ஆகிவிட்டேன்.விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel