வங்கதேசத்திற்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 409 ரன்களை குவித்துள்ளது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்.
சட்டோக்ராம் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
அனுபவம் மிக்க வீரரான தவான் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹதி ஹசன் பந்துவீச்சி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன் இணைந்த இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார்.
விராட் கோலி சிங்கிள்களை எடுத்துக் கொடுக்க மறுமுனையில் இஷான் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசி வங்கதேச பந்து வீச்சை கலங்கடித்தார். 131 பந்துகளை எதிர்கொண்ட அவர், 24 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அந்த வகையில் பல்வேறு சாதனைகளை இஷான் இன்றைக்கு முறியடித்திருக்கிறார்.
தன் பங்கிற்கும் சதம் அடித்த விராட் கோலி 91 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 113 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
Ind vs Ban | மீண்டும் டாஸில் தோற்ற இந்தியா... ரோஹித்துக்கு பதிலாக ஓபனிங்கில் இளம்வீரர்.. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு
முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கடைசிப் போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரராக ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடினார். இந்த மாற்றத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!