ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைசதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். டாக்கா, இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி 'திரில்' வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியினருடன் இணைந்துள்ளார்.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்தபோட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்துவருகிறார்.
அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. இஷான் கிஷன் அதிரடியை கட்டுப்படுத்த வங்காளதேச பந்துவீச்சாளர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை வெறும் 126 பந்துகளில் அடுத்துள்ளார். இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டைசதமாகும். அவர் 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்சருடன் 210 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி அவுட்டானார்.
இந்தியாவில் சச்சின், சேவாக், ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் இரட்டை சதமடித்து புதிய சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி 38 ஓவர்களில் 320 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!