INDIAN 7

Tamil News & polling

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவு

17 டிசம்பர் 2022 10:57 AM | views : 149
Nature

ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய உதயநிதி, படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பை தாண்டி தயாரிப்பு மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.  அவரின் ரெட் ஜெயின்ட் நிறுவன மூலம் பல திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறார்.


இதுவரை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.  ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகம் நீக்கப்படுகிறது.  இனிவரும் காலங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்ற பெயர் மட்டுமே அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இடம்பெறும். இது சமீபத்தில் உருவாகியுள்ள செம்பி மற்றும் வாரிசு படங்களின் விளம்பரங்களில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.03.2026) ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்