ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா (எ) ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவரது இல்லத்திற்கு சென்ற முதல்வர், ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆறுதல் கூறினார்.

ரங்கராஜ் பாண்டே தந்தை திருவுருவப்படத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா மறைவையொட்டி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தனது தந்தை மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய முதல்வருக்கு  ரங்கராஜ் பாண்டே நன்றி  தெரிவித்துக்கொண்டார். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel