POLLING FLAMES

 

தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

2 years ago 23 மார்ச் 2024 03:12 AM | views : 221
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஊர்குடியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி, நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஓட்டலில் இரவு தங்கினார்.இன்று அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வந்தடைந்தார். தஞ்சையில் காலை நேரத்தில் முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.

சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்பகுதியில் பொதுமக்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் உரையாடிய அவர், அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். விளையாட்டு மைதானத்தில் இருந்தவர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN கோவை CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை அமமுக தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சீமான் AJITH KEERTHY SURESH OPS கைது பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் நெல்லை RAJINIKANTH NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தீபாவளி கொரோனா THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் வன்னியர் மதுரை CSK அஜித் தேவர் தென்காசி தூத்துக்குடி சூர்யா திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் விடுமுறை கள்ளக்காதல் SURIYA ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை