நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும். மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.
புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார். நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.
தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை. தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம்.
பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா? இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம். பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.இவ்வாறு அவர் கூறினார்.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு? அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!