POLLING FLAMES

 

ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்களா? காங்கிரஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

2 years ago 29 மார்ச் 2024 03:47 AM | views : 241
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது.

அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK AMMK TVK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK PMK இந்திய அணி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் முக ஸ்டாலின் COIMBATORE OPS SURIYA தேவர் வன்னியர் NELLAI நெல்லை தமிழ்நாடு கைது சீமான் KEERTHY SURESH பிரதமர் மோடி அமமுக சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சூர்யா AJITH THIRUMAVALAVAN விடுமுறை தென்காசி CSK TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION நடிகை PARLIAMENT ELECTION அன்புமணி அஜித் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் RAJINIKANTH கள்ளக்காதல்