POLLING FLAMES

 

அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

2 years ago 30 மார்ச் 2024 02:06 PM | views : 215
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-"கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி, அதன்பிறகு அந்த தொகுதி பக்கமே போகாமல் இருந்தார். அந்த தொகுதியில் நிற்க முடியாமல், கோவில்பட்டியில் நின்றார்.

அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவரை புறக்கணித்து தோல்வி அடைய செய்தனர். கடைசி புகலிடமாக தேனி தொகுதிக்கு வந்துள்ளார். தேனி மக்களும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. டி.டி.வி. தினகரன் வீராப்பாக சுற்றி வருகிறார். அவரின் வீராப்பு தேனி தொகுதியில் எடுபடாது.என்னை பபூன் என்று கூறுகிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். ஆனால், டி.டி.வி. தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். என்னால் எந்த தீமையும் ஏற்படாது. அவரால் என்னென்ன தீமை ஏற்படும் என்று தெரியும். இங்கு நாங்கள்தான் வெற்றி பெறுவோம். டி.டி.வி. தினகரன் பெரா வழக்கில் கைதாகி சிறை செல்வார்.ஜெயலலிதா இருக்கும்வரை டி.டி.வி. தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். அது சத்தியம்தான். ஆனால், இப்போது அவர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. உங்களிடம் இருந்து விடுதலை பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

ஜெயலலிதா இருக்கும்வரை டி.டி.வி. தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். எங்களை சீண்டி பார்க்க நினைத்தால், எச்சரிக்கிறோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.வாய்ச்சவடால் பேசும் உங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. தேனியில் டி.டி.வி. தினகரன் மண்ணைக் கவ்வுவது உறுதி. எனவே, விரக்தியின் வெளிப்பாடாகதான் எங்களை கேலி செய்கிறார். டி.டி.வி. தினகரன் எங்கு போட்டியிட்டாலும் தோற்பது உறுதி."இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் PMK டிடிவி தினகரன் AIADMK கனமழை பாமக பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கோவை தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS திருமாவளவன் COIMBATORE INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் AJITH EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக பிரதமர் மோடி கைது OPS தமிழ்நாடு PARLIAMENT ELECTION சீமான் KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL RAJINIKANTH நெல்லை TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI சூர்யா வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி CSK தென்காசி ELECTION COMMISSION கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் விடுமுறை தேவர் வன்னியர் தீபாவளி அஜித் SURIYA கீர்த்தி சுரேஷ் மதுரை