Tamil News & POLLING

 

அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் விசாரணை

1 year ago 02 ஏப்ரல் 2024 04:09 PM | views : 147
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குநர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று காலை நேரில் ஆஜரானநிலையில், டெல்லியில் இயக்குனர் அமீரிடம் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது இயக்குநர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK MK STALIN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழகம் மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் பாமக தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை PARLIAMENT ELECTION UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM CONGRESS கைது அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி அமமுக EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் SEEMAN NELLAI கொலை KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை TAMILAGA VETTRI KAZHAGAM கோவை தமிழ்நாடு தீபாவளி நெல்லை கள்ளக்காதல் OPS தென்காசி COIMBATORE TAMIL ACTRESS வன்னியர் திருநெல்வேலி மதுரை TAMIL CINEMA நயினார் நாகேந்திரன் ஓபிஎஸ் தேவர் THIRUMAVALAVAN திருமாவளவன் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON தமிழக அரசு AJITH கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் விடுமுறை MADURAI THOOTHUKUDI டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தல் டிரெண்டிங் ELECTION COMMISSION