Tamil News & POLLING

 

அரசியலிலும் சாதித்த கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்!

1 year ago
04 ஜூன் 2024 11:40 AM | views : 138
கொல்கத்தா, கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிட்டார்.அதே தொகுதியில் பதானை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட்டார்.


மேலும் பா.ஜ.க. சார்பில் நிர்மல் குமார் சஹா போட்டியிட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பராம்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யூசுப் பதான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து அசத்திய அவர், தற்போது அரசியலிலும் வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் சீமான் பாராளுமன்ற தேர்தல் PMK தமிழகம் கனமழை இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM பாமக PARLIAMENT ELECTION CONGRESS கைது பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH SEEMAN NELLAI கொலை EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை அமமுக தென்காசி கள்ளக்காதல் TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION தமிழ்நாடு மதுரை COIMBATORE கோவை THOOTHUKUDI OPS திருநெல்வேலி சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் நெல்லை பாலியல் தொல்லை தேவர் TAMIL CINEMA நாம் தமிழர் கட்சி AJITH NORTHEAST MONSOON டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI நயினார் நாகேந்திரன் வன்னியர் கொரோனா தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் திருமாவளவன் ஓபிஎஸ் THIRUMAVALAVAN தமிழக அரசு