நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன்5) இரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார்.
அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பயணி நாங்குநேரிக்கு போகாதது குறித்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் கேட்கும் போது சபாநாயகர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து செல்ல வேண்டாம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாங்குநேரி ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் தாலுகாவின் தலைநகராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் காவல் நிலையம் மருத்துவமனை என பல்வேறு சேவைகளுக்கு நாங்குநேரி வட்டாரம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகள் வழியில் உள்ள முக்கிய ஊரான நாங்குநேரிக்குள் செல்லாமல் பல நேரங்களில் புறவழிச் சலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
அனைத்து பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் அதனை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் பெற்ற சிறப்பு உத்தரவு இருந்தும் அதனை மதிக்காத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் ஊழியர்களும் சட்ட விரோதமாக அரசு பேருந்துகளை புறவழிச் சாலையில் இயக்கி வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் எம்எல்ஏ எம்பிக்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என கூறும் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் சபாநாயகர் அப்பாவுவை தொடர்புபடுத்தி நெல்லையில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அரசு பேருந்து செல்ல வேண்டாம் என கூறியதாக வெளியான வீடியோ தகவலால் நாங்குநேரி தொகுதி வாழ் மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி
அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கொக்கந்தான்பாறையைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (17), ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (17), நிகில் ஆகியோர் ஜோதிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் உட்பட 6 பேர் முன்னீர்பள்ளம் அருகே வடுபூர்பட்டி பகுதியைச் சேர்ந்த வகுப்பு தோழன் ஒருவரின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்சிக்கு சென்றனர். பின்னர்,
டீ குடிக்க கூப்பிட்டவரின் மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் மனைவி!
பீதியை கிளப்பிய திருச்சி விமானம்.. பத்திரமாக தரையிறங்கியது
141 பயணிகளின் நிலை என்ன? உலகில் அதிகம் பேரால் டிராக் செய்யப்படும் திருச்சி விமானம்!
Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly
வேட்டையன் முதல் நாள் வசூல்! vettaiyan movie day 1 box office collection
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்
மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!