POLLING FLAMES

 

தமிழக பாஜக தலைவர் மாற்றம்!... பாஜக தலைவராகிறார் எஸ்.பி.வேலுமணி!

1 year ago 06 ஜூன் 2024 11:55 AM | views : 233
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.



அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று கூறியிருந்தார்.இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "2019-ல் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.



தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்? எஸ்.பி.வேலுமணி கூறியதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம்" என்று கூறியிருந்தார்.



இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "அ.தி.மு.க. குறித்தோ, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அண்ணன் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.



தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அ.தி.மு.க. பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் குறித்தோ, அண்ணன் @SPVelumanicbe அவர்கள் குறித்தோ பேசுவதற்கு @annamalai_k க்கு எந்த அருகதையும் இல்லை.




இந்த நிலையில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட போவதாகவும், அந்த பதவிக்காக எஸ் பி வேலுமணியை பாஜக தன் பக்கம் இழுப்பதற்காக வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION கோவை கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி தமிழ்நாடு கைது சீமான் அமமுக திருமாவளவன் KEERTHY SURESH AJITH INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS தேவர் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை தீபாவளி ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் சூர்யா மதுரை தூத்துக்குடி THIRUMAVALAVAN CSK வன்னியர் SURIYA தென்காசி திருப்பரங்குன்றம்