POLLING FLAMES

 

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு பிட்ச்சை மாற்ற கேரண்டி கொடுத்த ஐசிசி!

1 year ago 07 ஜூன் 2024 05:02 PM | views : 229
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் ஜூன் 9ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடமாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே தனித்துவமான மவுசு காணப்படுவது வழக்கமாகும். இம்முறை கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

எனவே அந்த மொத்த வெறியையும் இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் காண்பித்து வெற்றிக்கு போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அப்போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தை நினைக்கும் போதே பல ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த உலகக் கோப்பைக்காகவே பிரத்தியேகமாக நியூயார்க் நகரில் புதிய மைதானம் கட்டமைக்கப்பட்டு அதில் செயற்கையான பிட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அதை சேசிங் செய்ய 16.2 ஓவர்களை எடுத்துக் கொண்டது. அதே போல அயர்லாந்தை 96 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஒரு தலைப்பட்சமாக வென்றது. அதற்கு நியூயார்க் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமின்றி பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.

அதனால் அங்கு நடைபெறும் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்ற உணர்வை கொடுப்பதாக ரசிகர்கள் அதிருப்தி வெளிப்படுத்தினர். மேலும் மைக்கேல் வாகன், வாசிம் ஜாபர், இர்பான் பதான் போன்ற பல முன்னாள் வீரர்கள் நியூயார்க் பிட்ச் தரமற்றதாக இருப்பதாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன் நியூயார்க் பிட்ச் தரமானதாக புணரமைக்கப்படும் என்று ஐசிசி உறுதியளித்துள்ளது.


இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “டி20 ஐஎன்சி மற்றும் ஐசிசி ஆகியவை நாஸவ் சர்வதேச மைதானத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பிய படி சீராக விளையாடவில்லை என்பதை அங்கீகரிக்கின்றன. இந்த நிலைமையை சரி செய்வதற்கும் மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த மைதானக்குழு கடுமையாக உழைத்து வருகிறது” என்று கூறியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS தமிழகம் PARLIAMENT ELECTION கோவை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் BIGG BOSS TAMIL RAJINIKANTH கொரோனா வன்னியர் மதுரை ELECTION COMMISSION சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை அஜித் தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை