விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. ஜூன் 10ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் 20 ஓவரில் திணறலாக விளையாடிய அந்த அணி வெறும் 113/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 46, டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் சாகிப் 3, தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய வங்கதேச அணியும் 20 ஓவரில் வெறும் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.
வெற்றியை பறித்த விதிமுறை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 3, முகமதுல்லா 20 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 3 விக்கட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா அசத்தியது. முன்னதாக இந்தப் போட்டியில் ஓட்நெய்ல் பார்ட்மேன் வீசிய 18வது ஓவரின் இரண்டாவது பந்தை வங்கதேச வீரர் முகமதுல்லா அடிக்கத் தவறி காலில் வாங்கினார்.
அதனால் தென்னாபிரிக்க அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டனர். அப்போது களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார். அதற்கிடையில் முகமதுல்லா காலில் பட்ட பந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுக்காததால் பவுண்டரிக்கு சென்றது. அந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முகமதுல்லா டிஆர்எஸ் எடுத்தார்.
அதை 3வது நடுவர் சோதித்த போது ஸ்டம்ப் மீது பந்து படாதது தெரிந்தது. அதனால் 3வது நடுவர் அந்த தீர்ப்பை மாற்றி நாட் அவுட் வழங்கினார். ஆனால் களத்தில் இருந்த நடுவர் முதலில் அவுட் கொடுத்த காரணத்தால் அந்தப் பந்தில் வங்கதேசத்திற்கு பவுண்டரி கிடைக்கவில்லை. ஒருவேளை களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் லெக் பைஸ் அடிப்படையில் வங்கதேசத்திற்கு 4 ரன்கள் கிடைத்திருக்கும்.
அதனால் கடைசியில் வங்கதேசம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்காது. ஆனால் ஐசிசி “அப்பென்டிக்ஸ் டி விதிமுறைப்படி” டிஆர்எஸ் எடுத்ததும் அந்த பந்து காலாவதியாகி விட்டதாக கருதப்படும். அதனால் அவுட் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு நாட் அவுட்டாக மாற்றி வழங்கினாலும் அந்த பந்து காலாவதியாகிவிட்டதால் அதில் எடுக்கப்பட்ட ரன்கள் கொடுக்கப்படாது என்பது ஐசிசி விதிமுறையாகும். இந்த விதிமுறை தற்போது தங்களின் வெற்றியை பறித்ததால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
மணிமேகலை
பிரியங்கா
கருத்து இல்லை
பாமக
விசிக
இருவரும்
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
ஸ்காட்லாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி எடின்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து போராடி 20 ஓவரில் 154-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் டி20 போட்டிகளில் நிகழ்த்தாத சாதனையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு டி20 கிரிக்கெட்டில் மலை போன்ற ரன்களையும், சதங்களையும் விளாசிள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் டி20 கிரிக்கெட் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில்
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும் முக்கியமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க உள்ளன. அது போன்ற சூழ்நிலையில் நிறைய அணிகள் தங்களுடைய நட்சத்திர வீரர்களை கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த
புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர். இந்த சூழலில், அவரது வாழ்க்கை
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
மகாவிஷ்ணு அப்படி என்ன தவறு செய்துவிட்டார்.. 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
அதிமுகவுடன் இனி கூட்டணியே கிடையாது : அண்ணாமலை!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
விஜய் கோட் வசூல் நிலவரம்! Vijay Goat box office collection
1957 கீழத்தூவல் படுகொலை நடந்தது என்ன? உண்மை நிலவரம்
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!