ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, அர்ஷ்தீப் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
எனவே இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சமீப காலங்களாகவே பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்துள்ள ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. எனவே ரசித் கான் தலைமையில் முகமது நபி, குர்பாஸ் போன்ற தரமான வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் 2008 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்றில் 29 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 18 வெற்றிகளையும் சேசிங் செய்த அணிகள் 8 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வரலாற்றில் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 7 வெற்றிகளை பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
பார்படாஸ் நகரில் இப்போட்டி நடைபெறும் நாளன்று வானம் மேகமூட்டத்துடன் லேசாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசாக மழையின் குறுக்கீடு இருந்தாலும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
பார்படாஸ் மைதானம் வரலாற்றில் பவுலர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்களாகும். இங்கு அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 224 ரன்கள். வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 170 ரன்கள்.
எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. மேலும் இங்கே முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நல்ல ஸ்கோர் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி
அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் சமீபத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்தது போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேசம் சவால் விடுத்துள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில்
பீதியை கிளப்பிய திருச்சி விமானம்.. பத்திரமாக தரையிறங்கியது
141 பயணிகளின் நிலை என்ன? உலகில் அதிகம் பேரால் டிராக் செய்யப்படும் திருச்சி விமானம்!
Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly
வேட்டையன் முதல் நாள் வசூல்! vettaiyan movie day 1 box office collection
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து சொன்ன த.வெ.க தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்
மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!