ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பார்படாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை எந்த ஒரு ஆட்டத்திலையுமே தோல்வியை சந்திக்காமல் இறுதிவரை வெற்றி நடை போட்டு கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பை ஆகியவற்றை நெஞ்சில் பற்றி குத்திக் கொள்ளப் போவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றால் அதனை பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை தற்போது இந்த டி20 உலக கோப்பையை நாங்கள் ஜெயித்து உள்ளோம்.
எனவே ஜூன் 29ஆம் தேதியையும், இந்த டி20 உலக கோப்பை டிராபியையும் நான் நெஞ்சில் பதித்துக் கொள்ள போகிறேன். அதேபோன்று ஜூன் 29-ஆம் தேதி என்னுடைய தங்கையின் பிறந்த நாள் என்பதால் அது ஒரு கூடுதல் பரிசாக அவருக்கு அமையும்.
என் வாழ்நாளில் இந்த நாள் நினைவில் இருக்க வேண்டும் என்பதாலே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்றும் உலககோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!