POLLING FLAMES

 

ஃபைனல் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு கொடுத்திருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து

1 year ago 01 ஜூலை 2024 04:36 PM | views : 219
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை தோற்கடித்து வந்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அந்தப் போட்டியுடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 2012, 2014, 2016, 2021, 2022 ஆகிய வருடங்களில் தோல்வியை சந்தித்தார். ஆனால் சச்சின் போலவே தன்னுடைய 6வது முயற்சியில் டி20 உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக விடை பெற்றார்.


சொல்லப்போனால் அத்தொடரில் முதல் 7 போட்டிகளில் 75 மட்டுமே எடுத்து சொதப்பிய அவர் முக்கியமான இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்தார். அதனால் ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வென்று தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து விராட் கோலி விடைபெற்றார். இந்நிலையில் ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் 128 ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடிய விராட் கோலி விமர்சிக்கப்பட்டிருப்பார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடைசி நேரத்தில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் துல்லியமாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பவுலர் தான் ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வெல்வதற்கு தகுதியானவர் என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அந்த இன்னிங்ஸ் விளையாடியதன் காரணமாக ஹர்திக் பாண்டியா வெறும் 2 பந்துகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய கடினமான பேட்ஸ்மேனாக களமிறங்கினார்”

“இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருந்ததாகவே நான் நினைத்தேன். ஆனால் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் இந்தியாவை இறுக்கமான நிலைக்குத் தள்ளியது. அது கடைசியில் பவுலர்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையை நிரூபித்தது. அந்த நேரத்தில் தென்னாபிரிக்காவுக்கு 90% வெற்றி வாய்ப்பிருந்ததால் இந்தியா தோல்வியின் இடத்தில் இருந்தது”


“அங்கே இந்தியா திருப்பு முனையை நிகழ்த்தியது தான் விராட் கோலியை காப்பாற்றியது. ஏனெனில் அவர் 128 ஸ்ட்ரைக் ரேட்டில் கிட்டத்தட்ட பாதி இன்னிங்ஸ் விளையாடினார். எனவே என்னுடைய ஆட்டநாயகனாக ஒரு பவுலர் இருந்திருப்பார். ஏனெனில் அவர்கள் தான் உண்மையில் தோல்வியின் பிடியிலிருந்து ஆட்டத்தை எடுத்து இந்தியாவுக்கு கொடுத்தார்கள்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் டிடிவி தினகரன் இந்திய அணி காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் பாமக முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN CONGRESS தமிழகம் AJITH EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் KEERTHY SURESH தமிழ்நாடு OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் பிரதமர் மோடி நெல்லை கைது NELLAI சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN RAJINIKANTH தீபாவளி தேவர் திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை தென்காசி அஜித் கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி வன்னியர் சூர்யா விடுமுறை CSK கள்ளக்காதல்