POLLING FLAMES

 

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் நடிகருமான ஆனந்த கண்ணன் மறைந்தார்!

4 years ago 17 ஆகஸ்ட் 2021 03:56 AM | views : 248
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன்(48). சிங்கப்பூர் தமிழனான ஆனந்த கண்ணன், அந்நாட்டில் ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் தமிழகம் வந்த அவர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இணைந்து மிகவும் புகழ் பெற்றார்.

தொடர்ந்து சிந்து பாத், விக்கிரமாதித்தன் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் சினிமா வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரையிலும் வலம் வந்த ஆனந்த கண்ணனுக்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படம் மட்டுமே ஓரளவு பாஸிட்டிவாக அமைந்தது. இவர் நடிப்பில் உருவான முள்ளும் மலரும், இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஆகிய படங்கள் ரிலீஸாகவில்லை.

தனக்கான வாய்ப்புகள் குறையவே சிங்கப்பூர் சென்ற ஆனந்த கண்ணன் மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை முறையாக பயின்ற ஆனந்த கண்ணன், ஆனந்த கூத்து என்ற பயிற்சி அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 16 நேற்று, ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாத நிலையில் அரிதான புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட்பிரபு இரங்கல்
ஆனந்த கண்ணன் இறந்த தகவலை அவரது நண்பர் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

ஆனந்த கண்ணன் மறைவுக்கு ஏராளமான ரசிகர்களும் தங்களது இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

அடுத்த செய்தி (Next) »

Gorgeous Actress Nivetha Pethuraj latest...
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK டிடிவி தினகரன் கனமழை ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் PARLIAMENT ELECTION AJITH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS அமமுக KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் கைது தேவர் NELLAI கொரோனா வடகிழக்கு பருவமழை நெல்லை BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் RAJINIKANTH THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SURIYA மதுரை கள்ளக்காதல் தென்காசி CSK சூர்யா விடுமுறை தூத்துக்குடி வன்னியர் தீபாவளி அஜித் திருப்பரங்குன்றம்