POLLING FLAMES

 

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்

1 year ago 06 டிசம்பர் 2024 12:27 PM | views : 276
அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக் அவுட் ஆகி சென்றார். அதே போல இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் அமைத்து அசத்திய ராகுலையும் 37 ரன்களில் அவுட்டாக்கிய ஸ்டார்க் அடுத்து வந்த விராட் கோலியையும் 7 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.

அதற்கிடையே மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 31 ரன்களில் அவுட்டாகி எமாற்றத்துடன் சென்றார். அடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 ரன்னில் அவுட்டானதால் 87-5 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நித்திஷ் ரெட்டி நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த ரிஷப் பண்ட் 21 ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக 22 (22) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய நித்திஷ் ரெட்டி நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து சுமாரான பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டார். குறிப்பாக ஸ்டார்க், போலண்ட் ஆகியோருக்கு எதிராக அவர் அடித்த சிக்ஸர்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அந்த வகையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்று பவுண்டரி மூன்று சிக்சருடன் 42 (54) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இளம் வீரர் நித்திஸ் ரெட்டி இந்த தொடரில் தான் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

அந்த வாய்ப்பில் இதுவரை அவர் 3 இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, தோனி, கங்குலி கபில் தேவ், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்களை விட நித்திஷ் ரெட்டி அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். மேற்குறிப்பிட்ட ஜாம்பவான் வீரர்கள் 5 அல்லது குறைவான சிக்ஸர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி ரஜினிகாந்த் PMK ANBUMANI RAMADOSS AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI AJITH கொலை COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது தமிழ்நாடு சீமான் OPS KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக RAJINIKANTH TAMIL ACTRESS ஓபிஎஸ் தேவர் கொரோனா சட்டசபை தேர்தல் நெல்லை NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN மதுரை ELECTION COMMISSION விடுமுறை திருப்பரங்குன்றம் வன்னியர் தீபாவளி கள்ளக்காதல் அஜித் சூர்யா தென்காசி CSK SURIYA கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி