POLLING 📊 TN ELECTION 2026

 

தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை - திமுக விளக்கம்

4 months ago 24 நவம்பர் 2025 02:53 AM | views : 268
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

அண்ணா சொன்னதை தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதில் இருந்து ஒரு துளி கூட நாங்கள் விலகவில்லை. தற்போது வரை மாநில உரிமைக்காக மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் அண்ணா சொன்னார். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்.

கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை, பெண் பாதுகாப்புக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அரசியலில் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதையாவது சொல்வார்கள். தமிழ்நாடு மணிப்பூர் அல்ல. இங்கே பெண்களுக்கு எதிராக என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய்க்கு அண்ணா யாரென்றே தெரியாது. முதல்-அமைச்சர் ஆகும் ஆசையில் அவர் இருக்கிறார்.

மக்கள் மயக்கம் அடைவதை பற்றி கவலைப்படாமல் இருந்தவர் விஜய். அவர் எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு அருகதை இல்லை. நாங்கள் யாரையும் தற்குறி என்று சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS AIADMK PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முக ஸ்டாலின் கோவை UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் CONGRESS சட்டசபை தேர்தல் கைது COIMBATORE தமிழ்நாடு கொலை திருமாவளவன் சீமான் AJITH பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION இந்திய அணி தென்காசி NELLAI கொரோனா TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN TAMIL ACTRESS EDAPPADI PALANISWAMI தீபாவளி OPS அஜித் CSK கள்ளக்காதல் பாலியல் தொல்லை PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் MADURAI SEEMAN விடுமுறை கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி NORTHEAST MONSOON வன்னியர்