POLLING FLAMES

 

கொரோனாவுக்கு நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் பலி!

4 years ago 17 நவம்பர் 2021 08:50 AM | views : 243
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் கொரோனா பெருந்தொற்றால் தன்னுடைய 61வது வயதில் இன்று உயிரிழந்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.



கே.எஸ். ரவிக்குமாரின் துணை இயக்குனராக தன்னுடைய திரைப் பயணத்தை துவங்கிய மனோகர், பின்னர் கோலங்கள், புதுமைப்பித்தன், தென்னவன் போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தான் பணியாற்றும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த மனோகருக்கு தென்னவன் படத்தில் விவேக்குடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.



அதன்பின் நகுல், சுனைனா நடித்த மாசிலாமணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோகர் வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் அதன்பின் இயக்கினார். இதற்கிடையே 2012ஆம் ஆண்டு இவருடைய மகன் ரஞ்சன், தனியார் பள்ளி ஒன்றில் நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது இவரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



அதன்பின் படம் இயக்குவதை நிறுத்திய மனோகர், என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் பிஸி நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் கனமழை பாமக UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION கோவை தமிழகம் இந்திய அணி CONGRESS COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை INDIAN CRICKET TEAM அமமுக OPS சீமான் தமிழ்நாடு கைது AJITH KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா நெல்லை BIGG BOSS TAMIL ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS தீபாவளி NELLAI RAJINIKANTH வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION CSK கீர்த்தி சுரேஷ் தேவர் திருப்பரங்குன்றம் மதுரை தூத்துக்குடி தென்காசி அஜித் SURIYA கள்ளக்காதல் சூர்யா வன்னியர் விடுமுறை