POLLING FLAMES

 

தென் மாவட்டம் முழுவதும் சூர்யா பின்னால் நிற்கிறது.. தொட்டுபார்.. ராமதாசுக்கு பசும்பொன் பாண்டியன் எச்சரிக்கை.

4 years ago 19 நவம்பர் 2021 10:43 AM | views : 243
சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும்,

சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் எச்சரித்துள்ளார். ரவுடி கும்பலை வைத்து மிரட்டும் அரசியலை ராமதாஸ் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இது மொழி, இனம் கடந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள படமாகமாறியுள்ளது. பழங்குடியினர் இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாகி அவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். இத்திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் சமூகத்தை இந்த படம் காயப்படுத்தி விட்டதாக கூறி பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டும் என்று அறிவித்துள்ளதுடன், அவர் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக கலமிறங்கியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை மிக கடுமையாக எச்சரித்து பேட்டி கொடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, தனது தவறான அரசியல் முடிவுகளால் பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. ராமதாஸ் எந்த மக்களுக்காக கட்சி ஆரம்பித்தாரோ அந்த மக்களையே அவர் ஏமாற்றி வருகிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி அவர் வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளார். அந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அந்த மக்களுக்கு கிடைக்காது என்று அவருக்கு நன்கு தெரியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பை செய்யவைத்தார். அதேபாணியில் தொடர்ந்து அனைத்தையும் மிரட்டி சாதித்துவிடலாம் என அவர் தப்புக்கணக்கு போடுகிறார்.


ஆனால் இப்போது நடப்பது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ரவுடித்தனம் செய்ய முடியாது. இப்போது சூர்யாவை எதிர்ப்பது போல ரஜினியின் பாபா படத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மதுரையில் ரஜினி ரசிகர்களிடம் உதை வாங்கினார்களே அப்பொழுது ராமதாசால் என்ன செய்ய முடிந்தது. இப்போதும் நாங்கள் சொல்கிறோம், சூர்யாவை இதே போல மிரட்டினால், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்படும். ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வடமாவட்டங்களில் நீங்கள் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், தென்மாவட்டங்கள் முழுவதும் அதன் ஒட்டுமொத்த இளைஞர்களும் சூர்யாவின் பின்னால் நிற்கிறோம். நீங்கள் சூர்யாவை நெருங்கக் கூட முடியாது அவரிடம் ஐந்து கோடி அல்ல ஐந்து ரூபாய் கூட உங்களுக்கு கிடைக்காது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் முக ஸ்டாலின் கனமழை பாமக UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION கோவை தமிழகம் இந்திய அணி CONGRESS COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை INDIAN CRICKET TEAM அமமுக OPS சீமான் தமிழ்நாடு கைது AJITH KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா நெல்லை BIGG BOSS TAMIL ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS தீபாவளி NELLAI RAJINIKANTH வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION CSK கீர்த்தி சுரேஷ் தேவர் திருப்பரங்குன்றம் மதுரை தூத்துக்குடி தென்காசி அஜித் SURIYA கள்ளக்காதல் சூர்யா வன்னியர் விடுமுறை